HTML

சுவிஸ் நாட்டுக்காக ஜெபியுங்கள்

Swiss -

Donnerstag, 13. September 2012

ஓட்டம் - பரிசு


ஓட்டம் - பரிசு -- தொடர்ந்து ஓடும் 




வெட்ட  வெளியில் 
மண்டையை  வெடிக்க 
வைக்கும்
வெயிலில் அகோரம்

நீண்ட இடை
காலத்தின் - பின்
 நீடித்த வெயில்
நீண்டதனால்



 காக கறுப்பாகி
தோல் கருகி
நாவுட ன்  துவண்டு
முழு சரீரமும் கூட

அந்த நேரம்
தாகத்துக்கு
தண்ணீர் கூட
தாராளம்
இல்லாத நேரம்

தன்னம் தனியாய் 
தனித்து ஒருவனை
மயான சாலையில் 
நேசரின் அன்புக்காய் 

என்னையே
அற்பணித்ததற்கு
எனக்கு கிடைத்த  பரிசு 
அவதூறுகளும்  வேதனைகளுமே !


தேவையா  எனக்கு ?
ஆம்
தேவை தான்
காரணம்  கர்த்தர்


அவரின்  அன்பு
தியாகம்  நோக்கம்
என்பதை  நினைப்பதால்
தொடர்ந்தது ஓட்டம்

என் உயிர்
பிரியும் வரையும்
கர்த்தருக்கான ஓட்டம்
தொடர்ந்து ஓடும்

உங்கள் கல்மகன்
டேவிட்

Posted by Picasa
Powered By Blogger

Meine Blog-Liste